மேலும்

மாதம்: July 2019

ஐதேக வேட்பாளராக சஜித் – நாடாளுமன்றக் குழுவில் முன்மொழிவு

வரும் அதிபர் தேர்தலில் ஐதேக வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்தும் யோசனையை  ஐ.தேக நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் பலரும் நேற்று முன்மொழிந்துள்ளனர்.

வாக்குறுதியை மீறி அவசரகாலச் சட்டம் நீடிப்பு

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்காக அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க படைகளை அனுமதிக்கும், மறுக்கும் உரிமை சிறிலங்காவுக்கே – அலய்னா  ரெப்லிட்ஸ்

சிறிலங்காவுடன் சிறப்பு படைகள் ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ள அமெரிக்கா விரும்புகிறதே தவிர, இங்கு இராணுவத் தளத்தை அமைக்கும் எண்ணம் ஏதும் கிடையாது என அமெரிக்க தூதுவர் அலய்னா  ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய வரைபடம்

சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்படும், துறைமுக நகர நிலப்பரப்பை உள்ளடக்கிய சிறிலங்காவின் புதிய புவியியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவிகளை ஏற்பதில்லை – முஸ்லிம் காங்கிரஸ் முடிவு

சிறிலங்கா அரசாங்கத்தில் மீண்டும் அமைச்சர் பதவிகளை இப்போது பொறுப்பேற்றுக் கொள்வதில்லை என, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

சக்திவாய்ந்த நாட்டின் இராணுவ முகாமில் ஐ.எஸ் தலைவர் – பேராயர் மல்கம் ரஞ்சித் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குல், ஒரு அனைத்துலக, சதி என்றும், அனைத்துலக சக்திகளின் நலன்களுக்கு துணைபோன சிறிலங்கா அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளதாகவும், கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.

யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

மானிப்பாயில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, யாழ். குடாநாட்டில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நீர்கொழும்பு தேவாலயம் மீளத் திறப்பு – வரலாற்று சின்னமாக இரத்தக்கறையுடன் அந்தோனியார்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய செபஸ்தியார் தேவாலயம்- மூன்று மாதங்களுக்குப் பின்னர் நேற்று மீளத் திறக்கப்பட்டது.

சம்பந்தனை அழைக்கவில்லை – ஒப்புக்கொண்டார் மனோ கணேசன்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒழுங்கு செய்திருந்த சந்திப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் ஒப்புக் கொண்டுள்ளார்.

மானிப்பாயில் சூட்டுக்குப் பலியானவர் கொடிகாமம் இளைஞன்

மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன், தென்மராட்சி கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என்று உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.