சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு சேவை நீடிப்பு
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒரு ஆண்டு சேவை நீடிப்பு வழங்கியுள்ளார்.
அமெரிக்க சரக்கு விமானம் ஒன்று நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வெஸ்ரேன் குளோப் எயர்லைன் நிறுவனத்துக்கு சொந்தமான மக் டோனல் டக்ளஸ் 11 விமானமே, நேற்று அதிகாலை 3.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அமெரிக்கப் படைத்தளத்தை அமைப்பதற்கு அனுமதியளிக்கக் கூடிய, அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, சிறிலங்காவில் அதிகரித்து வரும் எதிர்ப்புகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக, புதுடெல்லியில் இருந்து வெளியாகும் ‘எகொனமிக் ரைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தனியான கல்முனை பிரதேச செயலகத்தை அமைத்து தருவதாக சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், அவுஸ்ரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட முக்கியமான 8 நாடுகள் உள்ளிட்ட 26 நாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், ஒன்பது நாடுகளில் இருந்த தூதுவர்கள் மாத்திரமே, துறைசார் இராஜதந்திரிகளாக இருந்தனர் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளை நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.