மேலும்

நாள்: 11th July 2019

27 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர், 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு ரணிலுக்கு ஆலோசனை

பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பட்டியலை கோரும் தெரிவுக்குழு

சிறிலங்காவில் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற ஏப்ரல் 21ஆம் நாள், தாஜ் சமுத்ரா விடுதியில் தங்கியிருந்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலையும், அங்கு காலையுணவு சாப்பிட்டவர்களின் பட்டியலையும் சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற தெரிவுக்குழு கோரியுள்ளது.

சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து நிற்கும் – ட்ரம்ப் உறுதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் சிறிலங்காவுடன் அமெரிக்கா இணைந்து  நிற்கும் என்றும்,  பயங்கரவாத எதிர்ப்பு, கடல் மற்றும் எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  உறுதியளித்துள்ளார்.

‘’ஐ.எஸ் தாக்கவில்லை, அனைத்துலக சக்தியின் சதி வேலை” – என்கிறார் தயாசிறி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ஐஎஸ் அமைப்பு இருக்கவில்லை என்றும், இது அனைத்துலக சக்தி ஒன்றின் வேலையே எனவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலரான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று சிறிலங்கா வருகிறார் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இணைப்பாளர்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்ஸ் டி கெர்சோவ், சிறிலங்காவுக்கும் மாலைதீவுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உடன்பாட்டுக்கு வந்தால் தான் அமெரிக்காவுடன் சோபாவில் கையெழுத்து – ரணில்

சிறிலங்காவின் கருத்துக்களுக்கு அமெரிக்கா ஒப்புக் கொண்டால் மட்டுமே, சோபா மற்றும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்கு சேவைகள் (அக்சா) உடன்பாடுகளில் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரிகேடியர் உள்ளிட்ட 4 இராணுவத்தினருக்கு எதிராக ட்ரயல் அட் பார் விசாரணை

ரதுபஸ்வெலவில் குடிநீர் கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்க, மூன்று நீதியரசர்களைக் கொண்ட ட்ரயல் அட் பார் அமர்வு ஒன்றை நியமிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரிடம், சட்டமா அதிபர் கோரியுள்ளார்.