மேலும்

நாள்: 7th July 2019

உபாலி தென்னக்கோன் தாக்குதல் – கைரேகையால் மாட்டினார் இராணுவ அதிகாரி லலித் ராஜபக்ச

ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய  முக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

கண்டியில் இன்று பாரிய பிக்குகள் மாநாடு – பலத்த பாதுகாப்பு

கண்டியில் இன்று பொது பலசேனா அமைப்பின் ஏற்பாட்டில் 10 ஆயிரம் பௌத்த பிக்குகள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படவுள்ளதால், அங்கு பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோத்தாவும் அமெரிக்காவும்

வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்துவதற்கான எல்லா ஒழுங்குகளையும் மகிந்த ராஜபக்ச செய்து கொண்டிருக்கின்ற நிலையில், கோத்தாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான நகர்வுகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அனைத்துலக தீவிரவாத, மத அடிப்படைவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள சிறப்பு பிரிவு

அனைத்துலக  தீவிரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டு மத அடிப்படைவாதக் குழுக்களின் அச்சுறுத்தலை கண்காணிப்பதற்கும், எதிர்கொள்வதற்குமாற சிறப்பு பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இளைஞர்கள் கடத்தல் தெரியும் என அட்மிரல் கரன்னகொட ஒப்புதல்

தெகிவளையில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்படை தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததை, அறிந்திருந்தார் என்பதை, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

அமெரிக்க பயிற்சி நெறியில் பங்கேற்க சிறிலங்கா இராஜதந்திரிக்கு தடை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் பணியாற்றும், சிறிலங்கா இராஜதந்திரி ஒருவர், அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் ஆசிய கரையோர காவல்படை தலைவர்களின் கூட்டம்

ஆசிய கரையோர காவல் அமைப்புகளின் தலைவர்களின் 15 ஆவது, கூட்டம் கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. நாளை ஆரம்பமாகும் இந்தக் கூட்டம், 11ஆம் நாள் வரை தொடர்ந்து இடம்பெறும்.