மேலும்

மாதம்: July 2019

3 மிக முக்கிய பிரமுகர்களுக்கு 2245 சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு

கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப்படையின் பெரும்பாலான கொமாண்டோக்கள், மிக முக்கிய பிரமுகர்கள் மூவரின் பாதுகாப்புக்கே பயன்படுத்தப்படுவதாக, சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி எம்.ஆர்.லத்தீப் தெரிவித்துள்ளார்.

இரகசிய இடத்தில் 5 மணிநேர விசாரணை – முக்கிய கேள்விக்கு புலனாய்வு தலைவர் மௌனம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் நிலந்த ஜெயவர்த்தனவிடம், ஐந்து மணி நேரம் இரகசிய இடத்தில் விசாரணை நடத்தியுள்ளது.

குடியுரிமை துறப்பு ஆவணத்தை பெற்று விட்டார் கோத்தா- கம்மன்பில

அமெரிக்க குடியுரிமையைத் துறக்கும் இறுதி ஆவணத்தை கோத்தாபய ராஜபக்ச கடந்து மே மாதமே பெற்று விட்டார் என கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐ.நா அறிக்கையாளரை அனுமதித்த பதில் வெளிவிவகார செயலர் பதவி நீக்கம்

தலைமை நீதியரசர் மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதிகளை,  ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பதற்கு ஒழுங்கு செய்யுமாறு நீதியமைச்சின் செயலருக்கு அறிவுறுத்தலை அனுப்பிய- வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் அகமட் ஜவாட்டை பதவியில் இருந்து நீக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

புலனாய்வு உயர் அதிகாரிகள் ஒளிய வேண்டியதில்லை- சிஐடி பணிப்பாளர்

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக் கூடாது என்றும், இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே அவ்வாறு மறைத்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும், குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

போட்டியிடுவது குறித்து இறுதி முடிவு இல்லை – சமல் ராஜபக்ச

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாம் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பனை நிதியத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சுயாதீனமான பனை நிதியத்தை உருவாக்குவதற்கு, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்கள் குறித்து ஆராய அமைச்சரவை உபகுழு

உலகின் ஏனைய நாடுகளில் பயன்பாட்டில் உள்ள தீவிரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்பாக ஆராய்ந்து, சிறிலங்கா அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு, அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

21/4 தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இல்லை – சிஐடி பணிப்பாளர்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை நடத்திய உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதிகள், ஐஎஸ்  அமைப்புடன் நேரடியான தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என, குற்ற விசாரணைத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு ஆகியவற்றின் பணிப்பாளரான ரவி செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் புலிகள் இயக்க உறுப்பினர் மீது பாயும் கதிர்காமர் கொலை வழக்கு

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரை படுகொலை செய்வதற்கு உதவினார் என, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனி காவல்துறையினர், வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.