மேலும்

நாள்: 15th July 2019

வெளிநாட்டவர்களுக்கு ஆயுதங்களை விற்ற சிறிலங்கா கடற்படை அதிகாரிகள்? – விசாரணைக்கு உத்தரவு

சிறிலங்கா கடற்படையின் ஆயுதங்கள் வெளிநாட்டவர்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக் குறித்து விசாரணை நடத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா படைகளுடன் பிரித்தானிய இராணுவமும் கூட்டுப் பயிற்சிக்கு ஆயத்தம்

சிறிலங்கா படைகளுடன் இணைந்து பிரித்தானிய இராணுவம் இந்த ஆண்டு கூட்டுப் பயிற்சி ஒன்றை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக, பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்கா இராணுவத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

தீவிரவாத முறியடிப்பு – சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப உதவிகளை அளிக்க உறுதி

சிறிலங்காவின் பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்லீஸ் கெர்சோவ் உறுதியளித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு குறைந்த கட்டண விமான சேவை

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரை தலைமையிடமாக கொண்டியங்கும், குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான, ஜெட் ஸ்ரார் எயர்வேய்ஸ், சிறிலங்காவுக்கு விரைவில் விமானங்களை இயக்கவுள்ளது.

புலனாய்வு அதிகாரிகளை ஒளிப்படம் எடுக்கவும் தடை

எதிர்காலத்தில் புலனாய்வு அதிகாரிகளிடம் காணொளிப் பதிவு கருவி மூலம், சாட்சியங்களை பதிவு செய்ய ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தியா- சிறிலங்கா இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம்

இந்தியப் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை இந்தியாவும் சிறிலங்காவும் பரிமாறிக் கொள்வதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மைத்திரிக்கு இன்னமும் 45 நாட்களே காலஅவகாசம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு, இன்னமும் ஒன்றரை மாத காலஅவகாசமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.