நாடு திரும்பினார் கோத்தா
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்றிரவு 11.45 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்பினார்.
சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானத்தின் மூலம், கோத்தாபய ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கடந்த மாதம் சிங்கப்பூர் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவுக்கு, அங்கு இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, மேலதிக காலம் ஓய்வெடுக்க அனுமதி கோரப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு மாதங்கள் கழித்து அவர் நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.