பிரதமரை நீக்கும் அதிகாரம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை – சட்ட நிபுணர்கள் கருத்து
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின்படி, பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம், சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன்,, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
கூட்டு அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் எதிர்வரும் 20ஆம் நாள் நடைபெறும் என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை மற்றும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த அதிபர், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு, சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவிடம் இருந்து தமக்குத் தொலைபேசிய அழைப்பு வந்தது உண்மையே என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் கடந்த ஒரு ஆண்டு காலத்தில் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றக் கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம்மிடம் கோரவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய, தாம் தொடர்ந்தும் பிரதமராகப் பதவி வகிக்கப் போவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்வது குறித்து, தாம் சட்டமா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோருவதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினரிடம் உறுதியளித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் கூட்டு எதிரணியின் ஆதரவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள அதேவேளை, நாடாளுமன்றத்தில் ஐதேக அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.