மேலும்

மாதம்: February 2018

மகிந்தவின் ஆதரவுடன் நிமாலை பிரதமராக மைத்திரி இணக்கம் – உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு

மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணியினருடன் இணைந்து, ஆட்சியமைக்கும் முயற்சியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

செப்ரெம்பரில் அடுத்த பூகம்பம் – தயார்படுத்துகிறது தேர்தல் ஆணைக்குழு

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அடுத்த மூன்று மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது.

“பொய்… பொய்… முழுப்பொய் “ என்கிறார் மகிந்த

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று தாம் கூறியதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பது முழுப் பொய் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

ஊடகங்கள் மூலம் இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென ரத்துச் செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல் குழப்பங்களால் சிறிலங்காவின் பொருளாதாரம் சரிவு – 157.20 ரூபாவாகியது டொலர்

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இரண்டு நாட்களில், 1.06 ரூபாவினால் சரிவைச் சந்தித்துள்ளது.

ரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார்.

பதவி விலகுகிறார் சாகல? – ரணிலுக்கு ஐதேக முழு ஆதரவு

கூட்டு அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பது என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு இன்று முடிவு செய்துள்ளதாக கட்சியின் பொதுச்செயலர் கபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

இதொகா முத்து சிவலிங்கத்துக்கு பிரதி அமைச்சர் பதவி

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இன்று பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். அவருக்கு, ஆரம்ப தொழிற்துறை பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டு அரசு தொடரும், அமைச்சரவையில் மாற்றம் – ராஜித சேனாரத்ன

ஐதேகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள கூட்டு அரசாங்கம் தொடரும் என்று, அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.