மேலும்

அரசியல் குழப்பங்களால் நல்லிணக்கத்துக்கு ஆபத்து – மைத்திரி, ரணிலுக்கு மகாநாயக்கர் அவசர கடிதம்

Malwatte Chapter Mahanayake Most Venerable Tibbotuwawe Sri Siddhartha Sumangalaநாட்டில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை மற்றும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த அதிபர், மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு, சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும், மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர், நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவசர கடிதங்களை அனுப்பியுள்ளார்.

இந்தக் கடிதத்தில், அவர்,  உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை மற்றும் குழப்ப நிலை என்பன நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

” இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் ஆட்சி மற்றும் பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படும்.

எனவே அரசாங்கம், கடந்த அதிபர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

விவசாயம், மதங்கள், கலாசாரம், பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்” என்றும் மல்வத்தை பீட மகாநாயக்கரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *