மேலும்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை முடிவு – கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லை

local-election results (4)கிளிநொச்சி மாவட்டம்,  பச்சிலைப்பள்ளி  பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 வட்டாரங்களில், 6 வட்டாரங்களைக் கைப்பற்றிய போதிலும், விகிதாசார முறையில் எந்த இடங்களும் கிடைக்காததால், அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இதனால், கூட்டமைப்பு 6 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு  என்பன 7 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன. இதனால் தொங்கு சபை அமையும்  நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டம்  – பச்சிலைப்பள்ளி  பிரதேச சபை 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி  – 2,953 வாக்குகள் – 6 ஆசனங்கள்
சுயேட்சைக் குழு                           – 2,070 வாக்குகள் – 4 ஆசனங்கள்
தமிழ் காங்கிரஸ்                           –    651 வாக்குகள் – 1 ஆசனம்
ஈபிடிபி                                             –   465 வாக்குகள் – 1 ஆசனம்
சிறிலங்கா சுதந்திரக் கட்சி         –   330 வாக்குகள் – 1 ஆசனம்
ஐதேக                                              –   179 வாக்குகள்
தமிழர் விடுதலைக் கூட்டணி   –    59 வாக்குகள்
லங்கா சமசமாசக் கட்சி              –    44 வாக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *