மேலும்

நாள்: 10th February 2018

கூட்டமைப்பின் வசமாகிறது வவுனியா நகரசபை

வவுனியா  நகரசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருத்தித்துறை பிரதேச சபையில் கூட்டமைப்பு முன்னணி – நகரசபையில் இழுபறி

பருத்தித்துறை பிரதேசசபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது. பிரதேசசபையின் மொத்தமுள்ள 12 வட்டாரங்களில், 8 வட்டாரங்களின் முடிவுகள் அதிகாரபூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை நகரசபையின் 7 வட்டாரங்கள் கூட்டமைப்பு வசம்

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக  வெற்றியைப் பெறும் நிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு – தமிழ் காங்கிரஸ் இடையே கடும் போட்டி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அகில இலங்கை தமிழ் காங்கிரசுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைவு

உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று நடந்த தேர்தலில் வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம், குறைந்தளவு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்களும் தலைவர்களும்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்களிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்களிப்பு இன்னும் சற்று நேரத்தில் நிறைவடையவுள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் வாக்களிக்கும் காட்சிகள். 

அமெரிக்கத் தூதரகப் பணிகள் வழமைக்குத் திரும்பின

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக செயலிழந்த அமெரிக்க தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்றிரவு அறிவித்துள்ளது.

உதயங்க விடுதலை – ஐக்கிய அரபு எமிரேட்சை விட்டு வெளியேற தடை

டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிகாரிகளால் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்தலைக் கண்காணிக்க 10 பேர் கொண்ட வெளிநாட்டு கண்காணிப்புக் குழு

சிறிலங்காவில் இன்று நடைபெறும் உள்ளூராட்சித் தேர்தலைக் கண்காணிக்க, நான்கு நாடுகளைச் சேர்ந்த 10 பேர் கொண்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர் குழுவொன்று கொழும்பு வந்துள்ளது.

சிறிலங்கா அதிபர், பிரதமரின் அறிக்கைகளுக்கு தேர்தல் ஆணைக்குழு தடை

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஆகியோர் வெளியிடும் எந்த அறிக்கைகளையும் வெளியிடக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.