மேலும்

ஆழிப்பேரலை வதந்தியால் வடக்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளில் பதற்றம்

tsunami-rumor (1)ஆழிப்பேரலை (சுனாமி) ஏற்படப் போவதாகப் பரவிய வதந்தியை அடுத்து, வடக்கு- கிழக்கு கரையோரப் பகுதிகளில் இன்று மக்கள் மத்தியில் பதற்றமான நிலை காணப்பட்டது.

இன்று காலை 10.30 மணியளவில் அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் ஆழிப்பேரலை வதந்தி பரவியது.

மட்டக்களப்பில் சில இடங்களில் கடல் உள்வாங்கியதுடன், கிணறுகளின் நீர்மட்டம் திடீரென குறைந்ததாகவும், இதையடுத்து ஆழிப்பேரலை ஏற்படலாம் என்றும் தகவல்கள் பரவின.

இதையடுத்து, பல இடங்களில் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். கரையோரப் பகுதி மக்கள் பொருட்களை எடுத்துக் கொண்டு, வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.

tsunami-rumor (1)

எனினும், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் அனர்த்தம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று அறிவித்தனர்.

ஆனாலும் வடக்கு கிழக்கு கரையோரப் பகுதிகளில்  பதற்றமான நிலையே காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *