மேலும்

சம்பந்தனிடம் விடைபெற்றார் கனடியத் தூதுவர் ஷெல்லி வைற்றிங்

shelly-whiting -sampanthan (1)கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும், அம்மையார் நேற்றுக்காலை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நான்கரை ஆண்டுகளாக சிறிலங்காவில் கனடாவின் தூதுவராகப் பணியாற்றியிருந்தார் ஷெல்லி வைற்றிங்.

இவர் தனது பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள நிலையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்களைச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டார்.

shelly-whiting -sampanthan (2)

நேற்றுக்காலை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்து அவர் கலந்துரையாடினார்.

இதன்போது, நல்லிணக்கம், கடந்தகால செயற்பாடுகள், தற்போதுள்ள தேவைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *