மேலும்

இராஜதந்திர தகைமையோ, அடிப்படை நாகரீகமோ இல்லாதவர் – ஐ.நா நிபுணரை சாடும் விஜேதாச

Wijeyadasa Rajapaksheசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எந்வொரு இராஜதந்திர தகைமையையோ, அடிப்படை நாகரீகத்தைக் கொண்டவரோ அல்ல என்று சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

ஐந்து நாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்புத் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், நேற்று தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தார்.

இவர் சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டிருந்த போது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுடன் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள விஜேதாச ராஜபக்ச, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பல ஐ.நா அறிக்கையாளர்கள் திறமை, மற்றும் இராஜதந்திர ஆற்றலைக் கொண்டவர்களாக இல்லை.

சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கு எந்வொரு இராஜதந்திர தகைமையோ, அடிப்படை நாகரீகமோ கிடையாது. அவர் ஒர இராணுவத் தளபதி போலவே நடந்து கோண்டார்.

எமது சந்திப்பின் போது,  கூட அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய தவறான தரவுகளுடன் வந்தார்.  அவரது தரவுகளுக்கான மூல ஆதாரங்களை நான் கேட்டேன். தகவல் மூலங்கள் நம்பகமானது என்று மாத்திரமே அவர் கூறினார்.

நான் அவரது தரவுகளை, ஆதாரபூர்வமாக நிராகரித்தேன்.

ஐ.நா அறிக்கையாளர் மோனிக்கா பின்டோவும் இப்படித் தான் முன்னர் சிறிலங்காவுக்கு வந்து, நிலைமைகளில் முன்னேற்றம் இருப்பதாக கூறினார். ஆனால் அவர் சமர்ப்பித்த அறிக்கை, நீதித்துறையை கடுமையாக விமர்சிப்பதாக இருந்தது.

அவரும் கூட, தமிழர்கள் தவறாக நடத்தப்படுவதாக கூறினார். இது தான் சிறிலங்காவுக்கு இப்போது பயணம் மேற்கொள்ளும் சிறப்பு அறிக்கையாளர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள்.

இவர்கள் போதிய திறமையற்றவர்களாகவும், மறைமுக நிகழ்ச்சி நிரலைக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

அவர்கள் ஆசியர்கள் கல்வியறிவற்றவர்கள், மேற்குலகைப் பின்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பென் எமர்சன், மோனிகா பின்டோ ஆகியோர் தொடர்பாக, விரைவில் சிறிலங்கா அதிபர் , பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோருக்கு மிகவிரைவில் எடுத்துக் கூறுவேன்,” என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *