மேலும்

ஆசியாவின் மிக உயரமான இரட்டைக் கோபுரம் – கொழும்பில் அமைக்க உடன்பாடு கைச்சாத்து

Iconic-Towerஆசியாவின் மிக உயரமானதும், உலகின் ஒன்பதாவது உயரமானதுமான இரட்டைக் கோபுரக் கட்டடம் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான 2 பில்லியன் டொலர் முதலீடு தொடர்பாக, சிறிலங்கா முதலீட்டுச் சபைக்கும், உலக கப்பிரல்  நிலையத்துக்கும் இடையில், உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கொழும்பின் இதயத்தில் உள்ள வணிகப் பகுதியில், 117 தளங்களை கொண்ட,  625 மீற்றர் உயரமான நவீன வசதிகளுடன் கூடிய இரட்டைக் கோபுரம் அமைக்கப்படவுள்ளது.

இதில் 1200 வதிவிட அலகுகள், 2000 விடுதி அறைகள், 3000 சில்லறை வணிகள் நிலையங்கள், 5000 வாகனங்களை நிறுத்தும் வசதி, 7 நட்சத்திர விடுதி, 20 ஆடம்பர  நீச்சல் தடாகங்கள், உலகின் மிக வேகமான இரண்டடுக்கு மின்னுயர்த்திகள், மற்றும் உலங்குவானூர்தி இறங்கு தளம் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளைக் கொண்டதாக இந்த இரட்டைக் கோபுரம் அமையவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *