மேலும்

மாதம்: May 2017

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறிலங்கா- அவுஸ்ரேலியா இணக்கம்

கடல்வழி ஆட்கடத்தல் மற்றும் கடல்கொள்ளைக்கு எதிராகச் செயற்படுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதிபூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவுஸ்ரேலியாவிடம் உறுதியளித்துள்ளார்.

இந்தியாவின் முதல் கப்பல் கொழும்பு வந்தது – மேலும் இரண்டு கப்பல்கள் வருகின்றன

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அனுப்பிய உதவிப் பொருட்களுடன் முதலாவது இந்திய கடற்படைக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

விடுதலைப் புலிகளை அழிக்க ஆலோசனை வழங்கிய கே.பி.எஸ்.கில் மரணம்

விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக சிறிலங்காவின் முன்னைய சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்துக்கு ஆலோசனைகளை வழங்கிய, இந்தியாவின் பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை பணிப்பாளர் கே.பி.எஸ்.கில் நேற்று காலமானார்.

தேடுதல், மீட்புக்கு உதவுமாறு அனைத்துலக சமூகத்திடம் சிறிலங்கா அவசர கோரிக்கை

பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளுக்கு உதவ முன்வருமாறு ஐ.நா, அனைத்துலக தேடுதல் மற்றும் மீட்பு ஆலோசனைக் குழு மற்றும் அயல்நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெள்ள மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி கவச வாகனங்கள்

சிறிலங்காவின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் பிரிஆர் துருப்புக்காவி கவசவாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் சிறிலங்கா

சிறிலங்காவில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம், நிலச்சரிவுகளில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இலட்சக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளன.

இரண்டு கப்பல்களில் உதவிப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா

சிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்ததால் இந்த நாட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். நான்கு பிள்ளைகளின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா, உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் அதாவது மார்ச் 2009ல் தனது குடும்பம் எவ்வாறான அவலத்தைச் சந்தித்தது என்பதை விபரித்தார்.

சிறிலங்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 91 பேருக்கு மேல் பலி

சிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 91 பேருக்கு மேல் பலியானதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத்தளம் – இரகசிய உடன்பாடு கையெழுத்தாம்

திருகோணமலை துறைமுகத்தை மையப் பகுதியாகக் கொண்டு அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான இரகசிய உடன்பாடு சிறிலங்கா- அமெரிக்க அரசுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், லங்கா சம சமாசக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.