மேலும்

நாள்: 26th May 2017

இரண்டு கப்பல்களில் உதவிப் பொருட்களை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா

சிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிப் பொருட்களை இரண்டு கடற்படைக் கப்பல்களில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது.

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் – அமெரிக்க ஊடகம்

சிறிலங்காவில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்ததால் இந்த நாட்டில் வாழ்ந்த ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டனர். நான்கு பிள்ளைகளின் தாயாரான காசிப்பிள்ளை ஜெயவனிதா, உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களின் முன்னர் அதாவது மார்ச் 2009ல் தனது குடும்பம் எவ்வாறான அவலத்தைச் சந்தித்தது என்பதை விபரித்தார்.

சிறிலங்காவில் கடும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 91 பேருக்கு மேல் பலி

சிறிலங்காவின் தென்பகுதியில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 91 பேருக்கு மேல் பலியானதாகவும், 110 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் அமெரிக்க கடற்படைத்தளம் – இரகசிய உடன்பாடு கையெழுத்தாம்

திருகோணமலை துறைமுகத்தை மையப் பகுதியாகக் கொண்டு அமெரிக்க கடற்படைத் தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான இரகசிய உடன்பாடு சிறிலங்கா- அமெரிக்க அரசுகளுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், லங்கா சம சமாசக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவு

ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீர் கேட்டுப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தனவை விளக்கமறியலில் வைக்க கம்பகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் மேலும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு- சிறிலங்கா அரசு

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

“மன்மோகன்சிங் மறைவு” – சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் போலி கீச்சக பதிவால் பரபரப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமாகி விட்டதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட போலி கீச்சகப் பக்கத்தில் பதிவு இடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தனைச் சந்தித்தார் சுவீடன் தூதுவர்

சிறிலங்கா, இந்தியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சுவீடன் தூதுவர் ஹரோல்ட் சான்ட்பேர்க் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.