மேலும்

நாள்: 4th May 2017

கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது மற்றொரு பாகிஸ்தான் போர்க்கப்பல்

பாகிஸ்தான் கடற்படையின் பிஎன்எஸ் சுல்பிகார் என்ற போர்க்கப்பல் நல்லெண்ணப் பயணமாக இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்தப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இந்தியாவுடன் அல்ல, இந்திய நிறுவனத்துடனேயே உடன்பாடு செய்வோம் – சிறிலங்கா பிரதமர்

இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் இணைந்து, சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது குறித்த கொள்கை ரீதியான முடிவே எடுக்கப்பட்டுள்ளது என்று சிறிலங்கா பிரதம் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா- பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் – நவாஸ் ஷரீப்

சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்துக்கு இராஜதந்திர அந்தஸ்து வழங்குகிறது சிறிலங்கா

அபிவிருத்திக்கான பிரெஞ்சு முகவரகத்தின் பணியகம் ஒன்றை சிறிலங்காவில் அமைப்பதற்கும், அதற்கு இராஜதந்திர நிலையை வழங்குவதற்கும் சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

அனுமன் பாலம் குறித்து இந்தியாவுடன் இணக்கப்பாடு ஏற்படவில்லை – சிறிலங்கா பிரதமர்

இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கின்ற பாலத்தை அமைப்பது தொடர்பாக அண்மைய இந்தியப் பயணத்தின் போது எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் பாதுகாப்பு அணியில் இருந்து 42 காவல்துறையினர் நீக்கம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 42 காவல்துறையினர் நேற்று திடீரென விலக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 45.27 மில்லியன் டொலர் கடன் வழங்குகிறது இந்தியா

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவின் எக்சிம் வங்கி 45.27 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க இணங்கியுள்ளது.

சுன்னாகம் படுகொலை – 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

சுன்னாகம் காவல் நிலையத்தில் சந்தேக நபரான இளைஞன் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்த குற்றச்சாட்டில், காவல்நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 6 சிறிலங்கா காவல்துறையினருக்கு தலா 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.