மேலும்

நாள்: 30th May 2017

உதவிப்பொருட்களுடன் சீனாவில் இருந்து சிறிலங்காவுக்கு விரையும் மூன்று கப்பல்கள்

வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்காவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சீனாவின் கப்பல்கள் கொழும்பு நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா அனுப்பிய மூன்றாவது உதவிக் கப்பலும் கொழும்பு வந்தது

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு மூன்றாவது இந்தியக் கடற்படைக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

பாகிஸ்தான் போர்க்கப்பலில் உதவிப் பொருட்களுடன், மீட்புக் குழுக்களும் கொழும்பு வருகை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா மக்களுக்கான அவசர உதவிப் பொருட்களுடன் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அவசர உதவிப் பொருட்களை வழங்கினார் இஸ்ரேலிய தூதுவர்

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இஸ்ரேல் அவசர உதவிப் பொருட்களை வழங்கியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை இன்று சந்தித்த இஸ்ரேலிய தூதுவர் டானியல் கார்மன் இந்த உதவிப் பொருட்களைக் கையளித்தார்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிப்படுத்தக் கோரி பாரிய போராட்டம்

கடத்தப்பட்டும், படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வீழ்ந்து நொருங்கிய உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை

வெள்ள மீட்பு நடவடிக்கையின் போது, காலி- பத்தேகம பகுதியில் விபத்துக்குள்ளாகிய எம்.ஐ.17 உலங்குவானூர்தியை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

அமைச்சரவை இணைப்பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர?

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானோர் தொகை 180 ஆக அதிகரிப்பு

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 180 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 110 பேர் காணாமல் போயிருப்பதாகவும், 109 பேர் காயமடைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு – ஜூலை 12இல் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான ஊழல் மோசடி வழக்கு ஜூலை 12ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சிறிலங்காவுக்கு உதவுவதாக அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானிய தூதுவர்கள் வாக்குறுதி

வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா மக்களுக்கு உதவ அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் முன்வந்துள்ளன.