மேலும்

நாள்: 28th May 2017

சடலங்களை ஏற்றிச் செல்லும் சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவிகள்

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளில் சிறிலங்கா இராணுவத்தினரின் துருப்புக்காவி கவச வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி மறைந்தார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி இன்று பிற்பகல் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

சிறிலங்கா அனர்த்தத்தில் பலியானோர் தொகை 146 ஆகியது – 112 பேரைக் காணவில்லை

சிறிலங்காவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 146 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)

இந்தியா அனுப்பிய இரண்டாவது கப்பலும் கொழும்பு வந்தது

சிறிலங்காவில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இந்தியக் கடற்படையின் இரண்டாவது கப்பல் இன்று மதியம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு இந்தியக் கடற்படை அளித்த கௌரவம்

எழிமலவில் உள்ள இந்தியக் கடற்படை அகடமியில் 338 கடற்படையினர் மற்றும் அதிகாரிகள் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதம அதிதியாகப் பங்கேற்றார்.

2016 இல் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சிறிலங்காவில் 2016ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட பீடங்கள் மற்றும் திணைக்களங்களின் மூலம், பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 28,952 ஆக அதிகரித்துள்ளதாக சிறிலங்கா மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போராடும் மக்களின் நம்பிக்கையை இழந்து வரும் சிறிலங்கா அரசாங்கம் : பாகம் -2

சிறிசேன 2015 அதிபர் தேர்தலில் போட்டியிடும் போது பரப்புரை செய்த துண்டுப்பிரசுரங்களை காசிப்பிள்ளை தனது ஆர்ப்பாட்டத்தின் போது வைத்திருக்கிறார். சிறிசேனவைச் சூழ வெள்ளை நிற பாடசாலைச் சீருடையுடன் சிவப்பு நிற கழுத்துப் பட்டி அணிந்தவாறு சில பெண் பிள்ளைகள் நிற்கும் ஒளிப்படத்தையும் காசிப்பிள்ளை வைத்திருந்தார்.

சிறிலங்காவில் ஜூலை 1ஆம் நாள் நடைமுறைக்கு வருகிறது நெகிழ்வுமுறை வேலை நேரத் திட்டம்

அரச பணியாளர்களுக்கான நெகிழ்வுமுறை வேலைநேரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வரும் ஜூலை முதலாம் நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தவுள்ளது.

அமெரிக்கா 15 மில்லியன் ரூபா உதவி

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவியாக 15 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெள்ளத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு – 97 பேரைக் காணவில்லை

சிறிலங்காவின் தெற்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொட்டிய கடும் மழையினால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி மரணமானோரின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. (படங்கள் இணைப்பு)