மேலும்

நாள்: 29th May 2017

சிறிலங்காவுக்காக போட்டி போடும் இந்தியாவும் சீனாவும்

சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில்,  பொருளாதார ஒத்துழைப்பின் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான வழிவகைகளை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.

களுத்துறையில் உடையும் நிலையில் அணைக்கட்டு – மக்களை வெளியேறுமாறு அவசர அறிவிப்பு

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாணப்பிட்டிய பொல்கொட அணை கடும் மழையால் உடையும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக சிறிலங்கா காவல்துறை எச்சரித்துள்ளது.

வீட்டின் மீது விழுந்து நொருங்கியது சிறிலங்கா விமானப்படை எம்.ஐ -17 உலங்குவானூர்தி

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா விமானப்படையின் எம்,ஐ-17 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதாக, அவரது செயலக வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் பலியானோர் தொகை 164 பேராக அதிகரித்தது – மோரா சூறாவளியும் மிரட்டுகிறது

சிறிலங்காவில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், மற்றும் நிலச்சரிவுகளினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக அதிகரித்துள்ளது.

தடுப்பு முகாமில் பெண்ணை முத்தமிட்ட ஈழத்தமிழருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் சிறைத்தண்டனை

அவுஸ்ரேலியாவில் புகலிடக் கோரிக்கையாளரான பெண் ஒருவரை, முத்தமிட்ட குற்றச்சாட்டில், குடிவரவுத் தடுப்பு முகாம் ஒன்றின் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றிய ஈழத் தமிழர் ஒருவருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் தி ஏஜ் நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு 2.2 மில்லியன் டொலர் உதவிப் பொருட்களுடன் விமானத்தை அனுப்புகிறது சீனா

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் நுழையும் ஆபத்து

கடும் மழையினால் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குள் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.