மேலும்

நாள்: 9th May 2017

மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அமர்வும்

தமிழீழ தேசிய துக்க நாளாகிய மே 18ம் நாளன்று மூன்றாவது முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளது.

கீதா குமாரசிங்கவின் பதவி ரத்து – நாடாளுமன்ற செயலாளர் அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் பதவி வெற்றிடமாகியுள்ளதாக, சிறிலங்கா நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க அறிவித்துள்ளார்.

மோடியின் பாதுகாப்புக்காக நான்கு உலங்குவானூர்திகள் கொழும்பு வருகை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான நான்கு சிறப்பு உலங்கு வானூர்திகள் நேற்று கொழும்புக்கு வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடியின் பயணத்தில் பொருளாதார நோக்கங்கள் கிடையாது – இந்தியத் தூதுவர்

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணம் எந்த பொருளாதார நோக்கங்களையும் கொண்டதாக இருக்காது என்று சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைக் கோருகிறார் கம்மன்பில

இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களைத் தருமாறு சிறிலங்கா குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல்களுக்குத் தயாராகுங்கள் – ஐதேகவினருக்கு ரணில் அழைப்பு

எதிர்காலத் தேர்தல்களுக்குத் தயாராகும்படி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறிலங்காவில் 100 பேருக்கு 135.7 தொலைபேசிகள்

சிறிலங்காவில் ஒவ்வொரு 100 பேருக்கும் 135.7 தொலைபேசிகள் பயன்பாட்டில் இருப்பதாக, சிறிலங்கா மத்திய வங்கியின் 67 ஆவது ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் – மே 15 இல் வெளியாகிறது சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு

வரும் மே 15 ஆம் நாள் பிரசெல்சில் வெளியிடப்படும் சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சிறிலங்காவுக்கு மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.