மேலும்

நாள்: 1st May 2017

யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராகப் பொறுப்பேற்றார் பேராசிரியர் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அதிபரால் யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கொழும்பு துறைமுக கொள்கலன் முனைய அபிவிருத்தியும் இந்தியாவிடம் ஒப்படைப்பு

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தை இந்தியாவுடன் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் இந்த மாத இறுதியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டமைப்பின் பேரணியில் 15 அம்ச மே நாள் பிரகடனம் வெளியீடு

அம்பாறை மாவட்டம்- ஆலையடிவேம்பில் இன்று காலை இடம்பெற்ற தேசியக் கூட்டமைப்பின் மே நாள் பேரணியில் 15 அம்சங்கள் கொண்ட மே நாள் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகிய அரச பணியாளர்கள் அதே பதவியை பெற முடியாது

தேர்தலில் போட்டியிடுவதற்காக அரச சேவையில் இருந்து விலகிக் கொள்வோர் மீண்டும் அதே பதவியைப் பெற முடியாது என்று சிறிலங்காவின் பொதுநிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அதிகாரத்துவ நாடுகளின் போட்டியை சாதகமாக்கும் சிறிலங்கா

சீனா, ரஸ்யா, ஜப்பான், இந்தியா போன்ற பிராந்திய அதிகாரத்துவ நாடுகள் கிழக்கு ஐரோப்பிய ஆசியப் பிராந்தியந்தின் ஊடாக தமது அரசியல் மற்றும் பொருளாதார இருப்பிடத்தை நிலைநாட்டுவதற்கு போட்டியிடுகின்றன.

சிறிலங்காவில் அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை களமாகியுள்ள மே நாள்

தொழிலாளர் நாளான மே நாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் நிலையில், சிறிலங்காவின் பிரதான அரசியல் கட்சிகள் தமது பலத்தை வெளிப்படுத்தும் பிரமாண்ட பேரணிகளை நடத்தவுள்ளன.

76 ஆண்டு கால சிற்றலை ஒலிபரப்பு பயணத்தை நிறுத்திக் கொண்டது பிபிசி தமிழோசை

பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி ஒலிபரப்பு நேற்றிரவுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. நேற்றிரவு தாயக நேரப்படி இரவு 9.15 மணி தொடக்கம் இடம்பெற்ற அரை மணிநேர சிறப்பு ஒலிபரப்புடன், சிற்றலை ஒலிபரப்பை பிபிசி தமிழோசை நிறுத்திக் கொண்டது.

முன்னாள் போராளிகளை உள்ளீர்க்க தமிழ் அரசுக் கட்சி முடிவு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தமது கட்சிக்குள் உள்ளீர்த்துக் கொண்டு, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி முடிவு செய்துள்ளது.