மேலும்

நாள்: 11th May 2017

சீன நீர்மூழ்கி மீண்டும் கொழும்பு வரத் திட்டம் – அனுமதி மறுத்தது சிறிலங்கா

சீன நீர்மூழ்கி ஒன்றை இம்மாதம் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிறுத்துவதற்கு சீனா விடுத்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக, உயர்மட்ட அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பில் இந்தியப் பிரதமர் மோடி – படங்கள்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கங்காராமய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் வெசாக் அலங்கார விளக்குகளையும் ஆரம்பித்து வைத்தார்.

சிறிலங்கா வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு சிறப்பு விமானம் மூலம் சிறிலங்காவை வந்தடைந்தார். சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியப் பிரதமரை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று வரவேற்றார்.

சிறிலங்காவில் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் நரேந்திர மோடி

சிறிலங்காவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா தலைவர்களுடன் முறைப்படியான அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்தமாட்டார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலர் சஞ்சய் பாண்டா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வழியாக ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்ட மாத்திரைகள் இத்தாலியில் சிக்கின

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் இருந்து சிறிலங்கா வழியாக கப்பலில் அனுப்பப்பட்ட 37 மில்லியன் வலி நிவாரணி மாத்திரைகள் இத்தாலி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

காலி கடற்படைத் தளத்தில் நெதர்லாந்தின் ஆயுதக்களஞ்சியம்

இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் தமது நாட்டுக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்குத் தேவையான ஆயுதங்களை, நெதர்லாந்து அரசாங்கம் காலி கடற்படைத் தளத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கவுள்ளது.

மோடிக்கு பாதுகாப்பு வழங்க கறுப்புப் பூனைகள் கொழும்பு வந்தன

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாதுகாப்பு வழங்கும் கறுப்புப் பூனை கொமாண்டோக்கள் கொழும்பு வந்திருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிலமும் புலமும் நலவாழ்வும் – தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் தொடக்க நிகழ்வில் கலந்துரையாடல்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் (Tamil-Norwegian Resource Association) தொடக்க நிகழ்வும் கலந்துரையாடலும் (6-5-17) சனிக்கிழமை ஒஸ்லோவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.