மேலும்

நாள்: 25th May 2017

maithripala- Malcolm Turnbull (1)

சிறிலங்கா அதிபருடன் அவுஸ்ரேலிய பிரதமர் பேச்சு – ஆட்கடத்தல் தடுப்பு குறித்து முக்கிய கவனம்

அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல்லை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.

Gnanasara

தலைமறைவாகியுள்ள ஞானசார தேரரை பிடிக்க காவல்துறையினர் தேடுதல் வேட்டை

இனவெறுப்புப் பரப்புரைகளை மேற்கொண்டு, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டி வந்த பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கு பல காவல்துறைக் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Brigadier Deshapriya Gunawardena

போர்க்குற்றவாளிகளில் ஒருவரான பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்த்தன கைது

வெலிவேரிய- ரதுபஸ்வெலவில் சுத்தமான குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட பிரிகேடியர் அனுர தேசப்பிரிய குணவர்த்தன இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

sri lanka police

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்கத் தவறிவிட்டது சிறிலங்கா காவல்துறை – விக்டர் ஐவன்

முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா காவல்துறை தவறி விட்டதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

renewable

பூநகரியில் 6000 ஹெக்ரெயர் பரப்பில் பாரிய காற்றாலை, சூரியசக்தி மின்திட்டம்

பூநகரியில் 1040 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி மற்றும் காற்றுவலு கலப்பு மின்திட்டத்தை அமைப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

airport

விமான பயணிகள் காவிச் செல்லும் கைப்பை தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகப் பயணம் செய்யும் விமானப் பயணிகள், கைப்பையில் காவிச் செல்லக் கூடிய பொருட்கள் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

sagala-ratnayaka

வடக்கில் 1000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு

வடக்கில் வேலையற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 1000 பட்டதாரிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் நியமனங்களை வழங்கவுள்ளது.

LNG-terminal

இந்தியாவும் ஜப்பானும் இணைந்து சிறிலங்காவில் எரிவாயு இறக்குமதி முனையத்தை அமைக்க இணக்கம்

இந்தியாவும் ஜப்பானும் இணைந்து சிறிலங்காவில் 250 மில்லியன் டொலர் செலவில், திரவ இயற்கை எரிவாயு இறக்குமதி முனையத்தை உருவாக்கவுள்ளன.

maithri

அமைதியைச் சீர்குலைக்க முனைவோர் மீது கடும் நடவடிக்கை – சிறிலங்கா அதிபர் உத்தரவு

நாட்டின் அமைதியை சீர்குலைக்க முற்படுவோர், அவர் யாராக, எந்த நிலையில் இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.