மேலும்

நாள்: 15th May 2017

அவுஸ்ரேலிய பாதுகாப்பு உயரதிகாரிகள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் முக்கிய பேச்சு

அவுஸ்ரேலியாவின் கூட்டு முகவர் அதிரடிப்படையின் தளபதியான எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சுமந்திரனுடன் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டங்களை நிறுத்தினார் சிறிலங்கா அதிபர் – அதிகார இழுபறியின் உச்சம்?

அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் வரையில் அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிறுத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவின் கூட்டு ஆட்சி தொடர இந்தியா உதவ வேண்டும்- மோடியிடம் கோரிய சம்பந்தன்

சிறிலங்காவில் தற்போது ஆட்சியில் உள்ள கூட்டு அரசாங்கம் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தவதற்கு இந்தியாவின் உதவி தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறிலங்கா பிரதமரை வரவேற்ற சீன அதிபர்

சீனாவின் பீஜிங் நகரில் நேற்று ஆரம்பமான ஒரு அணை ஒரு பாதை உச்சி மாநாட்டில் பங்கேற்கும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீன அதிபர் ஷி ஜின்பிங், சந்தித்துப் பேசினார்.

கண்டியில் தரித்து நிற்கும் மோடியின் உலங்குவானூர்தி – சிறிலங்கா விமானப்படையின் உதவி நிராகரிப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயண அணியில் இடம்பெற்றிருந்த உலங்கு வானூர்தியை திருத்துவதற்கு புதுடெல்லியில் இருந்து நிபுணர்களை அனுப்புவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்தியப் பிரதமருடன் மகிந்த நடத்தியது இரகசியப் பேச்சு – விபரம் வெளியிட மறுக்கிறார் பீரிஸ்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நடத்திய பேச்சு இரகசியமானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாவற்குழியில் புதிய விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

நாவற்குழியில் புதிய பௌத்த விகாரை ஒன்றுக்காக தாதுகோபத்தை அமைப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினர் அடிக்கல் நாட்டியுள்ளனர்.

சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரிடம் முதலமைச்சர்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் பில் ஜோன்சனிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.