மேலும்

நாள்: 20th May 2017

வடக்கின் அபிவிருத்தி குறித்து சிறிலங்கா பிரதமர் ஆய்வு

வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்வதற்காக நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பருத்தித்துறை துறைமுகத்தை பார்வையிட்டார்.

வடக்கு, கிழக்கில் குடும்பங்களின் கடன்படுநிலை அதிகரிப்பு – மத்திய வங்கி ஆய்வு

தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகரிக்கும் கடன்படுநிலை தொடர்பாக சிறிலங்கா மத்திய வங்கி ஆய்வு நடத்தவுள்ளது.

அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

16 மாதங்களாக வறுமைக்கோட்டுக்குள் இருக்கும் யாழ்., முல்லை., அம்பாறை மாவட்டங்கள்

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் சிறிலங்காவில் வறுமைக்கோட்டுக்குள் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் தொடர்ச்சியாக 16  மாதங்களாக  இடம்பெற்றுள்ளன.

சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா – ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால்,  இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றமையால் மட்டும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ சார் முரண்பாடுகள் ஏற்படவில்லை.

அவசர நிலையை எதிர்கொள்ள படையினர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்

எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்கு ஏற்றவகையில் சிறிலங்கா படையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குற்றமிழைத்த சிறிலங்கா படையினருக்கு சிறைச்சாலைக்குள் ஆசி வழங்கிய எல்லே குணவன்ச தேரர்

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்த, மற்றும் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா படையினரை சிறைச்சாலையில் சந்தித்து ஆசி வழங்கியுள்ளார் எல்லே குணவன்ச தேரர்.

பளை துப்பாக்கிச் சூடு- யாரும் சிக்கவில்லையாம்

பளை- கச்சார்வெளிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரின்  ரோந்து வாகனம் மீது நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திங்களன்று அமைச்சரவை மாற்றம் – மங்களவிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு பறிபோகிறது

சிறிலங்கா அமைச்சரவை வரும் திங்கட்கிழமை மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து மங்கள சமரவீர நீக்கப்படவுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.