மேலும்

நாள்: 21st May 2017

குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம்

குருநாகல் – மல்லவப்பிட்டியவில்  முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செவ்வாயன்று அவுஸ்ரேலியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபர் ஒருவர், அவுஸ்ரேலியாவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

கொழும்பிலா- யாழ்ப்பாணத்திலா விசாரணை? – வித்தியா கொலை வழக்கில் இழுபறி

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக ட்ரயல் அட்பார் விசாரணையை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த விசாரணையை கொழும்பிலா யாழ்ப்பாணத்திலா நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், இந்த விசாரணைகள் தாமதமடைந்துள்ளன.

புதிய அரசியலமைப்பு தாமதிக்கப்படாது – மோடியிடம் வாக்குறுதி கொடுத்த சிறிலங்கா தலைவர்கள்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் பணிகளில் தாமதம் ஏற்படாது என்று தாம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உலகத் தலைவர்களுக்கும் உறுதி அளித்திருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கூடியது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை

தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை என ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்ட வடிவமாகத் திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் ஏழாவது நேரடி அமர்வு அமெரிக்காவில் தொடங்கியது.

பளை துப்பாக்கிச் சூடு – முக்கிய துப்புகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்

பளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு – கொழும்பு அரசியலில் பரபரப்பு

சிறிலங்கா அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களையும் நாளை காலை 8.30 மணிக்கு அதிபர் செயலகத்துக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழில்பூங்காவை உருவாக்க ஆந்திர மாநில அரசுக்கு 500 ஏக்கர் காணி – சிறிலங்கா அரசு இணக்கம்

தொழில் பூங்காவை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆந்திர மாநில அரசாங்கத்துக்கு 500 ஏக்கர் காணியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் கனேடியப் போர்க்கப்பல்

கனேடிய கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எச்எம்சிஎஸ் வின்னிபெக் HMCS Winnipeg (FFH 338) என்ற றோயல் கனேடிய கடற்படைப் போர்க்கப்பலே சிறிலங்காவுக்கு பயிற்சி மற்றும் நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டுள்ளது.

காணாமல் போனவர்களைக் கண்டறிய புதிய விசாரணைப் பொறிமுறை – சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவில் போருக்குப் பின்னர் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானோரைக் கண்டறியும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இரகசியத் தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.