மேலும்

நாள்: 31st May 2017

deputy-ministers

3 பிரதியமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

சிறிலங்காவில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சற்று முன்னர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

No Tobacco Day

சிறிலங்காவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேரைப் பலியெடுக்கும் புகையிலை

சிறிலங்காவில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் பேர் புகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் மரணமாவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ruthrakumaran

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உருத்திரகுமாரன் வேண்டுகோள்

சிறிலங்காவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாத்தியமான வழிகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு, புலம்பெயர் தமிழர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Mahinda-Samarasinghe

அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் – சீன நிறுவனத்துடன் மீண்டும் நாளை பேச்சு ஆரம்பம்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக, சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன், சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் நாளை பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ளது.

drougth

தெற்கில் வெள்ளம், வடக்கில் வரட்சி – சிறிலங்காவில் தொடரும் துயரம்

சிறிலங்காவின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வரட்சி நீடிப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

mahinda-rajapaksha-1

ஜப்பான் செல்கிறார் மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுமார் பத்து நாட்கள் அவர் ஜப்பானில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Dayasiri Jayasekara

அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர நியமனம்

சிறிலங்கா அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

norway-tamil-3 -2017 (1)

நோர்வே தமிழ் 3இன் தமிழர் மூவர்-2017 – இளைய பல்துறை ஆளுமையாளர்கள் மதிப்பளிப்பு

Entrepreneurship எனப்படும் துறையில் மிக இளவயதில் (19) தடம்பதித்து வரும் மயூரன் லோகநாதன், மருத்துவரும் உலகளாவிய சுகாதாரம் மற்றும் எயிட்ஸ் நோய்த்தடுப்பு சார்ந்து மிகுந்த ஈடுபாடு உள்ளவரான ஆரணி மகேந்திரன், தமிழ் பாரம்பரிய வாத்திய இசைவடிவங்களுடன் மேற்கத்திய இசைவடிங்களை இணைத்து புத்தாக்க இசைப்படைப்புகளை வழங்கி வரும் மீரா திருச்செல்வம் ஆகியோருக்கு 2017ஆம் ஆண்டுக்கான தமிழ் 3இன் தமிழர் மூவர் விருது வழங்கப்பட்டுள்ளது.

vinayagamoorthy funeral

தீயுடன் சங்கமமானார் அப்பாத்துரை விநாயகமூர்த்தி – பெரும் திரளானோர் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் சடடவாளருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.