மேலும்

மாதம்: February 2017

இந்திய – சிறிலங்கா உடன்பாடு : சிஐஏ அறிக்கையை நிராகரிக்கும் சிறிலங்காவின் முன்னாள் புலனாய்வாளர்

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பின் (சிஐஏ)  ஆவணத்தின் பிரகாரம், ‘யாழ்ப்பாணத்தை’ கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு  கட்டளையிட்ட போதும் சிறிலங்கா இராணுவத்தினர் இரண்டு தடவைகள் தனது கட்டளையை நிராகரித்ததன் காரணமாக இந்தியாவின் தலையீட்டைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானதாக 1988 பெப்ரவரியில் சிறிலங்காவிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரியிடம் அப்போதைய சிறிலங்கா அதிபர் ஜெயவர்த்தன தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கூடாது – ஜெனிவாவில் சுமந்திரன் பரப்புரை

2015ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சிறிலங்கா எந்த மாற்றங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் கோரியுள்ளார்.

கீத் நொயார் கடத்தல் விசாரணையில் புதிய திருப்பம் – கோத்தாவே சூத்திரதாரி

தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவத்துடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தொடர்புபட்டிருந்தார் என்று கல்கிசை நீதிமன்றத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்த சிறிலங்கா விருப்பம்

எழுந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் கடல்சார் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைள் குறித்து ஆராய்வதற்கு இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு உச்சிமாநாடு ஒன்றை நடத்தும் திட்டத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிமசிங்க முன்மொழிந்துள்ளார்.

ஹவாயில் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்- சிறிலங்கா மேஜரை திருப்பி அனுப்பியது அமெரிக்கா

சிறிலங்கா அரசாங்கத்தினால் சிறப்புப் பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட மேஜர் தர அதிகாரி ஒருவர், அங்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை அடுத்து  நாடு கடத்தப்பட்டுள்ளார்.

சிறிலங்கா – இந்தியா இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைககள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படையை பலப்படுத்த ஜப்பான் உதவி

சிறிலங்கா காவல்துறையின் கொமாண்டோ படைப்பிரிவான, சிறப்பு அதிரடிப்படையையும், சிவில் விமானப் போக்குவரத்து திணைக்களத்தையும், பலப்படுத்துவதற்கான நவீன கருவிகளை ஜப்பான் கொடையாக வழங்கவுள்ளது.

அம்பாந்தோட்டை செயற்கைத் தீவை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க சிறிலங்கா மறுப்பு

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் உருவாக்கப்பட்ட செயற்கைத் தீவின் உரிமையை சீனாவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாஜகவின் உயர்மட்டப் பிரமுகர் சிறிலங்கா அரச தலைவர்களுடன் இரகசியப் பேச்சு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான, பாஜகவின் தேசிய செயலர் ராம் மாதவ், சிறிலங்காவுக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, உயர்மட்டச் சந்திப்புகளை நடத்தியுள்ளார் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவத்தினர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.