மேலும்

நாள்: 18th February 2017

கீத் நொயார் கடத்தப்பட்ட வழக்கில் சிறிலங்கா இராணுவ மேஜரும் இரு படையினரும் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஒருவரும், இரண்டு படையினரும் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டில் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கடும் கொந்தளிப்புக்கு மத்தியில், தமது அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபித்துள்ளார்.

பாகிஸ்தான் போர்க் கல்லூரியில் கடற்புலிகள் குறித்து பாடம் நடத்திய சிறிலங்கா கடற்படைத் தளபதி

பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கல்லூரியில் கடற்புலிகள் தொடர்பாகவும், அவர்களின் எழுச்சி வீழ்ச்சி தொடர்பாகவும் விரிவுரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன.

‘விமானப்படையின் காணி’ , ‘நுழைந்தால் சூடு’ – கேப்பாப்பிலவு மக்களுக்கு எச்சரிக்கை

தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் இன்று 19ஆவது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தக் காணிகள் தமக்கே சொந்தம் என்றும், அதற்குள் நுழைந்தால் சுடப்படுவீர்கள் என்றும் சிறிலங்கா விமானப்படை எச்சரித்துள்ளது.

திங்களன்று மைத்திரி, ரணிலை சந்திக்கிறார் ஜெய்சங்கர் – ஜெனிவா குறித்தும் பேசுவார்

சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், வரும் திங்கட்கிழமை சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

மே மாதம் சிறிலங்கா வருகிறார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மே மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனை இந்தியப் பிரதமர் உறுதிப்படுத்தியிருப்பதாக சிறிலங்கா அமைச்சர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு

சிறிலங்காவில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்றார் கப்டன் அசோக் ராவ்

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகராக கப்டன் அசோக் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்த கப்டன் பிரகாஸ் கோபாலன், பணியை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதை அடுத்தே, கப்டன் அசோக் ராவ், கொழும்பில் பணிகளைப் பொறுப்பேற்றுள்ளார்.