மேலும்

நாள்: 7th February 2017

சிறிலங்காவில் சீனாவின் நலன்களை கெடுக்கிறது இந்தியா – சீன அரசு நாளிதழ் குற்றச்சாட்டு

சிறிலங்காவில் சீனாவின் நலன்களுக்கு எதிராக இந்தியா செயற்படுவதாக, சீன அரசின் நாளிதழான குளோபல் ரைம்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற மறுத்த சிறிலங்கா படைகள் – சிஐஏ ஆவணத்தில் தகவல்

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகள் இரண்டு தடவைகள் மறுப்புத் தெரிவித்தமையால், இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக, முன்னாள் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியிருக்கிறார்.

ஜெனிவாவில் மற்றொரு தீர்மானமா? – சிறிலங்கா நிராகரிப்பு

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கும் முயற்சிகளைப் பிற்போடச் செய்வதற்காக, அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்த அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த வொசிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்பாடு – இந்தவாரம் இறுதி முடிவு

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமையையும், கைத்தொழில் வலயத்தை அமைப்பதற்காக 15 ஆயிரம் ஏக்கர் காணிகளையும் சீனாவுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பான உடன்பாடு, இந்த வாரம் இறுதி செய்யப்படும் என்று குளோபல் போர்ட்ஸ் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் சூரிய சக்தி மின் திட்டங்களில் ஜப்பான் 15 மில்லியன் டொலர் முதலீடு

சிறிலங்காவில் சூரிய சக்தி மின் திட்டங்களில் 15 மில்லியன் டொலரை முதலீடு செய்வதற்கு மூன்று ஜப்பானிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவின் குடியுரிமையைப் பறிக்கும் முடிவு எடுக்கப்படவில்லை – ராஜித சேனாரத்ன

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறிக்கும் முடிவு எதையும், சிறிலங்கா அரசாங்கம் எடுக்கவில்லை என்று அமைச்சர ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீனாவின் முதலீடுகள் சிறிலங்காவுக்குத் தேவை – ரணில்

சீனாவின் முதலீடுகள் சிறிலங்காவுக்குத் தேவைப்படுவதால், சீன முதலீட்டாளர்களை வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.