மேலும்

மாதம்: March 2017

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்த சீனா- இந்தியா இடையே நடக்கும் யுத்தம்

சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவது தொடர்பில் சீனா , இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.  சிறிலங்கா மீதான கடன் சுமை அதிகரித்த நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைச் சமன்செய்து அதன் மூலம் தன் மீதான நிதி நெருக்கடியைக் குறைப்பதற்கு சிறிலங்கா முயற்சிக்கிறது.

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு 1.3 பில்லியன் ரூபாவை கொடையாக வழங்குகிறது ஜப்பான்

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்கு ஜப்பான் 1.3 பில்லியன் ரூபாவை  கொடையாக வழங்க முன்வந்துள்ளது. திட்டமில்லா கொடை உதவித் திட்டத்தின் கீழ் இந்த நிதியை ஜப்பான் வழங்கவுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் முக்கிய பதவி

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் பொதுஉதவி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் இந்தியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கொழும்பு, காங்கேசன்துறை, திருமலை துறைமுகங்களில் இந்தியா முதலிடலாம் – அர்ஜூன ரணதுங்க

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா பெறவுள்ள நிலையில். சிறிலங்காவின் மூன்று துறைமுகங்களின் அபிவிருத்தியில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற முடியும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை காப்பாற்ற முனைந்த அரச சட்டவாளர்

போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த விடுதலைப் புலிகள் தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னர் சிறிலங்கா இராணுவத்தின் 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நீதிமன்றத்துக்கு அழைப்பது தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

ரஷ்யாவிடம் போர்க்கப்பல் கொள்வனவு சாத்தியமல்ல – சிறிலங்கா கடற்படை

ரஷ்யாவிடம் இருந்து ஜிபாட் 3.9 ரகத்தைச் சேர்ந்த போர்க்கப்பல்களை சிறிலங்கா கடற்படை கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தல் – 6 சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுதலை

2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயாரைக் கடத்திச் சென்று தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச

சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

புலிகளுக்கு எதிரான போரின் போது வேவு பார்த்தது இந்திய விமானம் – ஒப்புக்கொள்கிறது இந்தியா

விடுதலைப் புலிகளுடன் போர் நடந்து கொண்டிருந்த போது, சிறிலங்காவைச் சுற்றிய வான்பரப்பில் ரியூ 142 எம் என்ற இந்திய கடற்படையின் நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு விமானம் விரிவான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா தெரிவித்துள்ளார்.