மேலும்

மாதம்: January 2017

சிறிலங்கா அதிபரின் மரணத்துக்கு நாள் குறித்த சோதிடர் விஜித றோகண கைது

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மரணிக்கப் போவதாக, சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றின் மூலம் ஆரூடத்தை வெளியிட்ட சோதிடர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய்பபட்டார்.

தமிழ்நாட்டில் சிறிலங்கா படைகளுக்கு ஜெயலலிதா நிறுத்திய பயிற்சிகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி

சிறிலங்கா படையினருக்கு தமிழ்நாட்டில் மீண்டும் பயிற்சிகளை வழங்குவது தொடர்பாக இந்தியாவும், சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன தகவல் வெளியிட்டுள்ளார்.

மலேரியா ஒழிக்கப்பட்ட சிறிலங்காவில் ஆபத்தான நோய்க்காவி நுளம்பு – மன்னாரில் கண்டுபிடிப்பு

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்காவை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அழிப்பதற்கு கடினமான, மலேரியா நோயைப் பரப்பும் புதிய நுளம்பு வகை ஒன்று மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஐதேகவுடனோ, ரணிலுடனோ ஒருபோதும் இணையமாட்டேன் – கருணா

தாம் எந்தச் சூழ்நிலையிலும் ஐதேகவுடனோ, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து செயற்படமாட்டேன் என்று எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் சிறிலங்கா அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நலன்களுக்கு எதிரான செயற்படோம் – சிறிலங்கா கடற்படைத் தளபதி வாக்குறுதி

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சிறிலங்காவின் தரையிலோ, கடலிலோ எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என்று, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன உறுதியளித்துள்ளார்.

சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா

சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டு கற்கைநெறி ஒன்றை பயில்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலிகள் மீண்டும் ஒருங்கிணையும் அறிகுறியாம்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் படுகொலை செய்யும் சதித் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டதானது, சிறிலங்காவில் மீண்டும் விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.