மேலும்

நாள்: 2nd February 2017

கொழும்பு வந்தது சீனக் கடற்படையின் ஆய்வுக் கப்பல்

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின், சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான, குவான் சான்கியாங் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இலங்கையர்களுக்குத் தடையில்லை – அமெரிக்கா

அமெரிக்காவுக்குள் நுழைய இலங்கையர்களுக்குத் தடை விதிக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்துக்கான ஆறு சாத்தியப்படுமா?

‘யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்திற்காக’ 2010ல் ஆசிய அபிவிருத்தி வங்கியால் 130 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் வசதி மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான உள்ளுர்ச் செலவுகளுக்கான 26 மில்லியன் டொலர் நிதியானது சிறிலங்கா அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது.

சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் – பிரெஞ்சு அதிபர்

சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, பிரெஞ்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹொலன்ட் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் மாளிகையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பிரெஞ்சு அதிபர் புத்தாண்டு வரவேற்பு விருந்துபசாரத்தை அளித்தார்.

ஆபிரிக்காவுடன் நெருங்கும் சிறிலங்கா – எதியோப்பியாவில் புதிய தூதரகம் அமைக்கிறது

ஆபிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக, ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைமையகம் அமைந்துள்ள எதியோப்பியாவில், தூதரகம் ஒன்றை சிறிலங்கா திறக்கவுள்ளது.

சுமந்திரனே இலக்கு வைக்கப்பட்டார் – நீதிமன்றத்துக்கு அதிகாரபூர்வ அறிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீது, கடந்த ஜனவரி 13ஆம் நாள் படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இலங்கையர்களுக்கும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை?

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய குடிவரவுத் தடையினால், நியூயோர்க் விமான நிலையத்தில் இலங்கையர்களும் தடுத்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு 125 கோடி ரூபா ஒதுக்கீடு

இந்தியாவின் 2017-18ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் சிறிலங்காவுக்கு 125 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

மிருசுவிலில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட, சிறிலங்கா இராணுவ அதிகாரி சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் மேல்முறையீட்டு மனுவை, உயர்நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.