மேலும்

நாள்: 26th February 2017

கீத் நொயார் கடத்தலில் தனக்கு தொடர்பில்லையாம் – கோத்தா கூறுகிறார்.

‘தி நேசன்’ ஆங்கில நாளிதழின் இணை ஆசிரியராக பணியாற்றிய கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுடனான பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளில் இந்தியாவுக்கு ஆர்வமில்லை

சிறிலங்காவுடன் பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடுகளைச் செய்து கொள்வதை விட, கூட்டு முயற்சி உடன்பாடுகளைச் செய்து கொள்வதிலேயே இந்தியா ஆர்வம் காட்டுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் காலஅவகாசத்துடன் நிதி உதவியையும் கோரவுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் 24 மாத கால அவகாசத்தையும், நிதி உதவியையும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழத்தின் முன்னணி எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தன் காலமானார்

ஈழத்தின் முன்னணி எழுச்சிப் பாடகரும், பிரபல இசைக்கலைஞருமான எஸ்.ஜி.சாந்தன் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் யாழ்.போதனா மருத்துவமனையில் காலமானார்.

மகிந்தவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க மறுத்த சிங்கப்பூர்

அண்மையில் சிங்கப்பூருக்குச் சென்ற சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, தனியான பாதுகாப்பு வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ்  ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

செவ்வாயன்று ஓய்வுபெறுகிறார் நீதியரசர் சிறிபவன் – புதிய தலைமை நீதியரசர் யார்?

சிறிலங்காவின் தலைமை நீதியரசர் கே.சிறிபவன் வரும் செவ்வாய்க்கிழமையுடன் (பெப்ரவரி 28) ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த தலைமை நீதியரசராக யார் நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது – ஐ.நா, மேற்குலக தலைவர்களுக்கு மைத்திரி அறிவிப்பு

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கான நீதிப் பொறிமுறையில், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று, ஐ.நாவுக்கும், சக்திவாய்ந்த மேற்குலக நாடுகளின் தலைவர்களுக்கும் தாம் அறிவித்து விட்டதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.