மேலும்

நாள்: 15th February 2017

சிறிலங்காவில் பணியாற்ற ஆறரை இலட்சம் டொலர் தேவை – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் செயற்பாடுகளை சிறிலங்காவில் இந்த ஆண்டு முன்னெடுப்பதற்கு ஆறு இலட்சத்து 48 ஆயிரம் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

கடற்படை அதிகாரிகளை கைது செய்வதற்கு அரசியல் மட்டத்தில் தடை உத்தரவு

தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

சிறிலங்காவை விட்டு இந்தியாவை விலகச் சொல்லும் சீனா

தென் சீனக் கடல் தனக்குச் சொந்தமானது என்றும், அமெரிக்கா அங்குள்ள தீவுகளை விட்டு விலகியிருக்க வேண்டும் என்றும் சீனா அறிவித்த, தற்போது,  இந்தியாவை அதன் கொலனியான சிறிலங்காவை விட்டு விலகியிருக்குமாறு கூறுவதன் மூலம், இந்திய மாக்கடலில் தனது செல்வாக்கை சீனா நிலைநிறுத்தி வருகிறது.

“திரும்பி வாருங்கள்“ – அவுஸ்ரேலிய முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு ரணில் அழைப்பு

அவுஸ்ரேலியாவின் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

வெளிநாட்டு முதலீடுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் – சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்கள் ஆய்வு

பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரசன்னம் என்பவற்றினால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் தொடர்பாக சிறிலங்காவின் அதிகாரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் ஆய்வு நடத்தியுள்ளனர்.

அவுஸ்ரேலிய பல்கலைக்கழகத்தின் கலாநிதி பட்டம் – பெயருக்கு முன் பயன்படுத்த ரணில் தடை

அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கியுள்ளது.

காதலர்தினத்துக்கு சிறிலங்கா அரசியல்வாதி இறக்குமதி செய்த 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு

சிறிலங்கா அரசியல்வாதி ஒருவரால் காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2000 ஏனைய மலர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.