மேலும்

நாள்: 27th February 2017

பயிற்சியை முடித்து வெளியேறியது சிறிலங்கா கடற்படையின் மரைன் படைப்பிரிவு

சிறிலங்கா கடற்படையின் முதலாவது மரைன் படைப்பிரிவு பற்றாலியன், பயிற்சிகளை முடித்து வெளியேறியுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  சிறிலங்கா கடற்படையின் மரைன் படையணியின் அணிவகுப்பை பார்வையிட்டு, அவர்களுக்கான சின்னங்களை இன்று அணிவித்தார்.

சிறிலங்கா அதிபருடன் கூட்டமைப்பு சந்திப்பு – காணிகள் விடுவிப்பு குறித்து பேச்சு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

சிறிலங்கா குறித்த தீர்மானத்தை அமெரிக்காவே முன்வைக்கும்?

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை இம்முறையும் அமெரிக்காவே ஏனைய இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து முன்வைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக அமைதி காத்தே வந்திருந்தார். இவர் சிறிலங்காவிற்கு வருகை தந்த பின்னர் , ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான தனது அணுகுமுறையையும் மீள ஆராய்வதற்கான தக்க தருணமாக அமைந்திருக்கும்.

காணி விவகாரம் குறித்து முல்லைத்தீவு படைத் தளபதியுடன் பிரித்தானிய துணைத் தூதுவர் பேச்சு?

சிறிலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான முக்கியமான விவாதங்கள் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி நகர உடன்பாடு குறித்து சீனாவுடன் மீண்டும் பேச்சு

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் சீனாவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட துறைமுக நகர மற்றும் நிதி நகர உடன்பாடு தொடர்பாக மீண்டும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் சிறிலங்கா அமைச்சரவை மாற்றம்

அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரின் லகாட் அடுத்தமாதம் கொழும்புக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணத்தைத் தொடர்ந்து, சிறிலங்காவில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.