மேலும்

நாள்: 4th February 2017

உறவுகளை பலப்படுத்துவது இரு நாடுகளுக்கும் முக்கியம் – சிறிலங்கா அமைச்சரிடம் இந்தியத் தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக அண்மையில் பதவியேற்ற தரன்ஜித் சிங் சந்து, சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை முதல் முறையாகச் சந்தித்து, இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் விரைவாக  கையெழுத்திடுவது குறித்து பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்காவில் விரைவில் அமைச்சரவை மாற்றம்

சிறிலங்கா அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை மாற்றம் ஒன்று தேவைப்படுவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணங்கியுள்ளனர்.

அரசியலில் குதிக்கிறார் பிரவீனா ரவிராஜ்

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மகள், பிரவீனா ரவிராஜ் அரசியலில் நுழையவுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது சிறிலங்கா

இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது.

யாழ். வன்முறைக் குழுக்களை வேருடன் அகற்ற சிறப்பு அதிரடிப்படை களமிறக்கம்

யாழ்ப்பாணத்தில் மீண்டும் அதிகரித்துள்ள வாள்வெட்டு போன்ற சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், சிறப்பு அதிரடிப்படையினரை ஈடுபடுத்த, சிறிலங்கா காவல்துறை முடிவு செய்திருப்பதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் 69ஆவது சுதந்திர நாள் – கொழும்பில் கோலாகலம், வடக்கில் துக்கம்

சிறிலங்காவின் 69 ஆவது சுதந்திர நாள் இன்று கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்ற அதேவேளை, வடக்கில் கறுப்புநாளாகவும், துக்கநாளாகவும் கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.