மேலும்

நாள்: 22nd February 2017

சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கு ஆறு மாத சேவை நீடிப்பு

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, ஆறு மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த சேவை நீடிப்பை வழங்கியுள்ளார்.

நிறைவேற்றப்படாத ஜெனிவா வாக்குறுதிகள் – ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இன்று விவாதம்

சிறிலங்காவின் அனைத்துலக கடப்பாடுகள் என்ற தலைப்பிலான நாடாளுமன்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரவுள்ளது.

அபிவிருத்தி சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு – சபாநாயகர் அறிவிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள, அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரித்துள்ளதாகவும், கிழக்கு மாகாணசபை இதற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளதாகவும், சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

கூட்டமைப்பை ஏமாற்றமடையச் செய்த இந்தியா

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு, சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்திருப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக, பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

அபுதாபி பாதுகாப்பு கண்காட்சியில் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பிந்திய நவீன ஆயுத, தளபாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள, அபுதாபியில் நடைபெறும் ஐடெக்ஸ்-2017 அனைத்துலக பாதுகாப்பு கண்காட்சியில், சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன பங்கேற்றுள்ளார்.

தவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா

காணாமற்போனோர் தொடர்பான பணியகம், அமைக்கப்படுவது சிறிலங்கா படையினரை அனைவரையும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நிலையான அமைதிக்கு நல்லிணக்கம் முக்கியம் – அமெரிக்க குழுவிடம் சம்பந்தன்

சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கு நல்லிணக்கம் முக்கியமானது என்று, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.