மேலும்

நாள்: 16th February 2017

தமிழ்நாட்டின் 21 ஆவது முதல்வரானார் எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டின், 21 ஆவது முதலமைச்சராக, எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆளுனர் வித்தியாசாகர் ராவ் முன்னிலையில் பதவியேற்றார்.  ஆளுனர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்வில், அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

சிறிலங்காவில் பாதிக்கப்பட்டவர்களை நினைவில் கொள்ளுங்கள் அவுஸ்ரேலிய பிரதமரே….

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாகியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பாக மட்டுமல்லாது, விளையாட்டு மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவது தொடர்பாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நிகழ்ச்சி நிரலில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க ஆளுனர் அழைப்பு – முதல்வராக இன்று பதவியேற்கிறார்

தமிழ்நாட்டில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அதிமுகவின் சட்டமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட எடபபாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளார்.

புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை ஒப்படைக்க இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பற்றிய ஆவணங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரவிராஜ் கொலை வழக்கு – தீர்ப்புக்கு எதிராக மீளாய்வு மனு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சசிகலா ரவிராஜ் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பொறுப்புக்கூறலை விட எதிர்காலத்தின் மீதே தமிழ் மக்களுக்கு அதிக கரிசனை – என்கிறார் சந்திரிகா

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விட, தமது எதிர்காலம் தொடர்பாகவே தமிழ் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளனர் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகாரச் செயலர் ஜெய்சங்கர் விரைவில் கொழும்புக்கு பயணம்

இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை முதலீடுகளை தாமதிக்க சீனா முடிவு- சிக்கலில் சிறிலங்கா

சட்ட மற்றும் அரசியல் ரீதியான தடைகளை சிறிலங்கா அரசாங்கம் நீக்கும் வரைக்கும், அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டத்தில் 1.1 பில்லியன் டொலரை முதலீடு செய்யும் திட்டத்தை தாமதிப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.