மேலும்

நாள்: 5th February 2017

சீன இராணுவத் தளங்களுக்கு சிறிலங்காவில் இடமில்லை – சிறிலங்கா தூதுவர்

சிறிலங்காவில் எந்தவொரு துறைமுகத்திலும் இராணுவத் தளங்களை அமைப்பதற்கு சீனாவுக்கு இடமளிக்கப்படாது என்று சீனாவுக்கான சிறிலங்கா தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் கலப்பு நீதிமன்றம் கனவு மட்டுமே – மகிந்த சமரசிங்க

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை உருவாக்க எடுக்கும் நகர்வு வெறும் கனவு மட்டுமே என்றும், அது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் சிறிலங்கா அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 21 ஆவது முதல்வராகப் பதவியேற்கிறார் சசிகலா

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக,அதிமுக பொதுச்செயலர் வி.கே.சசிகலா தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் 9ஆம் நாள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். போராட்டத்தைப் படம் பிடித்த சிறப்புப் படைப்பிரிவு அதிகாரி

யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் அருகே நேற்று நடத்தப்பட்ட கருப்புக் கொடி ஏந்திய கவனயீர்ப்புப் போராட்டத்தை சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவை சேர்ந்த ஒருவர் காணொளிப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.

கப்பலில் சிக்கியிருந்த மூன்று இலங்கையர்கள் ஓமான் விமானப்படையால் மீட்பு

கஷாப் துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்றில் சிக்கியிருந்த மூன்று இலங்கை மாலுமிகளை ஓமான் விமானப்படையினர் உலங்கு வானூர்தி மூலம் மீட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க பாகிஸ்தானுக்குச் செல்கிறது சிறிலங்கா போர்க்கப்பல்

வடக்கு அரபிக் கடலில் 21 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும், அமான் பயிற்சி-17 என்ற கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க சிறிலங்கா கடற்படையின், எஸ்எல்என்எஸ் சமுத்ர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல், பாகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

சீனாவின் பட்டுப்பாதை திட்டம் – சிறிலங்காவில் வலுக்கும் மனக்கசப்பும் எதிர்ப்பும்

கேந்திர முக்கியத்துவம் மிக்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை மேலும் விருத்தி செய்தல் மற்றும் இதற்கருகில் பாரியதொரு கைத்தொழில் வலயம் ஒன்றை அமைப்பதற்கான உடன்படிக்கை ஒன்றில் கடந்த ஆண்டின் இறுதியில் சீனா கைச்சாத்திட்டது.

கருப்புக் கொடிகளுடன் சிறிலங்காவின் சுதந்திர நாள்

சிறிலங்காவின் 69ஆவது சுதந்திர நாளான நேற்று, வடக்கில் பல்வேறு இடங்களில், கருப்புக்கொடிகள் பறக்கவிட்டு துக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.

மே மாதம் சீனா செல்கிறார் ரணில்

சீனாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் மே மாதம், பீஜிங் செல்லவுள்ளார்.