மேலும்

நாள்: 13th February 2017

சந்திரிகா: மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை

சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல் தொடர்பாகத்  சிறிலங்காவைச் சேர்ந்த அவதானிப்பாளர்கள் தற்போது உரையாடி வருகின்றனர்.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதாயின் ஐ.நா மேற்பார்வை அவசியம் – சம்பந்தன்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்குவதாயின், ஐ.நா மேற்பார்வை அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்களைத் தாண்டியும் தொடரும் கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் (படங்கள்)

சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகளை மீள ஒப்படைக்கக் கோரி முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்று 14ஆவது நாளை எட்டியுள்ளது.

பாகிஸ்தானில் சிறிலங்கா கடற்படைத் தளபதி

பாகிஸ்தானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அங்கு அனைத்துலக கடல்சார் மாநாட்டிலும், கூட்டு பயிற்சியை மேற்பார்வையிடும் நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.

சிங்களவர்கள் ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம்- சுமந்திரன்

தமிழர்களுக்கு நீதியை வழங்க மறுத்தால், சிங்களவர்களை, ஆட்சி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பலாலி ஓடுபாதை விரிவாக்க ஆவணத்தில் ஒப்பமிடவில்லை – விக்னேஸ்வரன்

பலாலி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்குவது தொடர்பான எந்தவொரு ஆவணத்திலும் தான் ஒப்பமிடப் போவதில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா செல்கிறார் சிறிலங்கா பிரதமர்

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இன்று அவுஸ்ரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.