மேலும்

நாள்: 21st February 2017

அமெரிக்க நாடாளுமன்றக் குழு சிறிலங்கா அதிபரைச் சந்திப்பு

அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நேற்று சிறிலங்காவுக்குப் பணயம் மேற்கொண்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்புத் திட்டத்தின் ஒது அங்கமாக இந்தக் குழுவினர் மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ளனர்.

சிறிலங்காவுக்கு உடனடி வரட்சி நிவாரணம் – இந்தியா அறிவிப்பு

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு 100 மெட்றிக் தொன் அரிசியையும், 8 நீர்த்தாங்கிகளையும் உடனடி உதவியாக இந்தியா வழங்கவுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தில் உள்ள ஆறு பாலியல் குற்றவாளிகளின் விபரங்கள் ஐ.நாவிடம் கையளிப்பு

பாலியல் வல்லுறவு மற்றும் சித்திரவதை குற்றவாளிகளான ஆறு சிறிலங்கா படை அதிகாரிகள் பற்றிய தகவல்களை, பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றும் ஐ.நா குழுவிடம், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், சமர்ப்பித்துள்ளது.

சிறிலங்கா பிரதமரைச் சந்தித்தார் சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சாவோ, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் தனது திட்டங்களுக்கு கூட்டமைப்பை ஒத்துழைக்கக் கோருகிறது இந்தியா

வடக்கு, கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ். ஜெய்சங்கர் கோரியுள்ளார்.

காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடுகின்ற போராட்டம்

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பெப்ரவரி 09ஆம் நாள் கொழும்பிலுள்ள உயர்மட்ட அமைச்சர்களைச் சந்தித்தனர். இவர்கள் இந்தச் சந்திப்பில் தமது பொறுமை குறைந்து கொண்டு செல்வதாகவும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக இன்னமும் பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் ஆயுதம் தாங்கிய காவல்துறைக் குழுக்கள் பணியில்

சமூக விரோத மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களின் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில், ஆயுதம் தாங்கிய நடமாடும் காவல்துறைக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கூட்டமைப்புக்குள் ஒற்றுமை அவசியம் – அறிவுரை கூறிய இந்திய வெளிவிவகாரச் செயலர்

தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு- கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது – ஜெய்சங்கர் கைவிரிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்குமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் ஐவரும் இடைநிறுத்தம்

தி நேசன் இதழின் இணை ஆசிரியராக இருந்த கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்  என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் சேவையில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.