மேலும்

மாதம்: July 2016

சிறிலங்கா அதிபர், பிரதமரைச் சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கண்டியில் தலாய்லாமா குறித்த கண்காட்சி – சீனா அதிருப்தி

சீன வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, கடந்த புதன்கிழமை தலாய்லாமா தொடர்பான ஒளிப்படக் கண்காட்சி ஒன்று கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவுடன் வலுவான உறவுகள் தொடரும் – சீன வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் பெரியளவிலான உட்கட்டமைப்பு மற்றும் தனியார் முதலீடுகளை சீனா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், சிறிலங்காவுடன் விரைவில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்றும் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறிவிட்டார் மங்கள சமரவீர – மகிந்த அணி குற்றச்சாட்டு

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மகிந்த ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதியேன் – சிறிலங்கா அதிபர் மீண்டும் அறிவிப்பு

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்திலோ, நீதித்துறையிலோ எந்தவொரு வெளிநாட்டு நீதிமன்றம், நீதிபதி அல்லது அமைப்பும் தலையீடு செய்வதற்குத் தாம் இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானத்தில், சீன வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சம்பூர், பலாலி, காங்கேசன்துறை திட்டங்கள் குறித்து இந்தியா- சிறிலங்கா அமைச்சர்கள் பேச்சு

பலாலி விமான நிலைய அபிவிருத்தி மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக, இந்தியாவும், சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலங்களை மீட்பதற்கான கேப்பாப்பிலவு மக்களின் உறுதியான போராட்டம்

‘நான் எனது வீட்டிற்குள் நுழையும் போது, எனது அம்மாவினதும் எனது அப்பாவினதும் அன்பைப் பெறுவது போன்று உணர்கிறேன்’ என நீண்ட காலமாக தனது சொந்த வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்கின்ற ஆவலுடன் காத்திருக்கும் கேப்பாப்பிலவுக் கிராமத்தைச் சேர்ந்த மூத்த கிராமவாசி ஒருவர் தெரிவித்தார்.

இன்று மாலை மங்கள சமரவீரவை சந்தித்துப் பேசுகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக சிறிலங்கா வரவுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இன்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

சிறிலங்கா கடற்பரப்பில் மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது – ரணில்

சிறிலங்கா கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு ஒருபோதும் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.