மேலும்

நாள்: 11th July 2016

நாமல் கைது குறித்த மகிந்தவின் மனப்பகிர்வு

தனது மூத்த மகன் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவை 18ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

கிரிஷ் நிறுவனத்தின் 70 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார மத்திய நிலைய கருத்து வாக்கெடுப்பு – வெற்றிபெற்றது ஓமந்தை

வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்குச் சாதகமாகவே, கூட்டமைப்பின் அதிகளவு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச்செயலர் மாலினோவ்ஸ்கியும் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச்செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி, நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கைது செய்யப்பட்டார் நாமல் ராஜபக்ச – கோத்தாவிடம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

வித்தியா கொலையை விசாரிக்க யாழ்ப்பாணத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல்நீதிமன்றம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

நாளை பிரித்தானியா புறப்படுகிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் லண்டன் செல்லவுள்ளார்.

நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார்?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் படைக்குறைப்பு நடக்கவில்லை – மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்று, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை அடித்து நொருக்கினார் விகாராதிபதி

மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வர மறுத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது கொண்ட கோபத்தினால், அந்த விகாரையில் இருந்த சிறிலங்கா அதிபரின் பெயர் பொறித்த நினைவுக் கல்லை அடித்து நொருக்கி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார் விகாராதிபதி.