மேலும்

மாதம்: June 2016

அனைத்துலகப் பங்களிப்புக்கு சிறிலங்கா அஞ்சவில்லை – மங்கள சமரவீர

பொறுப்புக்கூறலுக்கான நீதிப்பொறிமுறை விடயத்தில்  அனைத்துலக பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அஞ்சவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐதேகவில் இணைந்தார் சரத் பொன்சேகா – களனி அமைப்பாளராக நியமனம்

சிறிலங்காவின் அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவில் இன்று காலை நடந்த நிகழ்வில் அவர், கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உறுப்பினராக இணைந்தார்.

நீண்ட பயணத்தின் ஆரம்பநிலையிலேயே சிறிலங்கா நிற்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்

போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயல்முறைகளில், அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

சிறிலங்கா இன்னமும் முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் – நாடுகள் வலியுறுத்தல்

மனித உரிமைகள் விவகாரத்தில், சிறிலங்கா மேலும் முன்னேற்றங்களை காண்பிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ள அதேவேளை, வெளித்தலையீடுகளின்றி உள்நாட்டு விவகாரங்களுக்குத் தீர்வு காண, சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டுக்குள் பொதுமக்களின் காணிகள் ஒப்படைக்கப்படும் – மங்கள சமரவீர

வடக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகள் அனைத்தும், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இறுதிக்குள் கையளிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் உறுதியளித்துள்ளது.

சிறிலங்கா கடற்படை அதிகாரியின் பதவியிறக்கத்தை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா கடற்படைத் தளபதியினால் அமைக்கப்பட்ட இராணுவ நீதிமன்றினால் குற்றவாளியாக காணப்பட்டு, பதவியிறக்கம் செய்யப்பட்ட, கடற்படைப் புலனாய்வு அதிகாரியான லெப்.கொமாண்டர் கே.சி.வெலகெதரவுக்கான தண்டனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரைச் சந்தித்தார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். ஜெனிவாவில் உள்ள ஐ.நா செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்றுக்காலை இடம்பெற்றது.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் பான் கீ மூன்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் அதிக இராணுவப் பிரசன்னம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் அதிகளவு இராணுவப் பிரச்சனம் இருப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் தெரிவித்துள்ளார்.

போரில் கொத்தணிக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் பாரதூரமானது – மங்கள சமரவீர

இறுதிக்கட்டப் போரில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமான விடயமாக இருக்கும் என்று, சி்றிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.