மேலும்

நாள்: 6th July 2016

வெளிவிவகாரச் செயலராகிறார் எசல வீரக்கோன் – இந்தியாவுக்கான தூதுவராக சித்ராங்கனி

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் நாள் இந்தப் புதிய பதவியை ஏற்றுக் கொள்வார் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.

திருகோணமலை – மதவாச்சி இடையே புதிய தொடருந்து வழித்தடம் – இந்தியா ஆர்வம்

திருகோணமலையில் இருந்து மதவாச்சிக்கு புதிய தொடருந்து வழித்தடம் ஒன்றை உருவாக்குவதில், இந்தியா ஆர்வம் கொண்டிருப்பதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவின் குளிரூட்டப்பட்ட நாய்க்கூண்டு – பராமரிப்பில் ஈடுபடுத்தப்பட்ட கடற்படையினர்

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச இருந்த போது, அவர் வளர்த்த உயர்வகை நாய்களைப் பராமரிக்க ஐந்து சிறிலங்கா கடற்படையினருக்கு முழுநேரப் பணி வழங்கப்பட்டிருந்ததாக பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகார முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், அதிபர் ஆணைக்குழுவின் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சிறிலங்கா படைகளுக்கு நவீன போர்த்தளபாடங்களை வழங்குகிறது ரஷ்யா

சிறிலங்கா படைகளுக்கு சில நவீன போர்த்தளபாடங்களை ரஷ்யா வழங்கவுள்ளதாக, சிறிலங்காவுக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்சான்டர் கர்சாவா தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா விமானப்படையிடம் இருந்து கைமாறியது மட்டக்களப்பு விமான நிலையம்

சிறிலங்கா விமானப்படையின் வசம் இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையம், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

ராஜ் ராஜரத்தினத்துக்கு நிபுணத்துவ உதவிகளையே வழங்கினேன் – சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர்

உள்ளக பங்கு வர்த்தக மோசடிக் குற்றச்சாட்டில் அமெரிக்காவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள, இலங்கைத் தமிழ் வர்த்தகர் ராஜ் ராஜரத்தினத்துக்கு தாம் நிபுணத்துவ சேவைகளை மாத்திரமே வழங்கியதாக சிறிலங்கா மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.