மேலும்

நாள்: 5th July 2016

‘சிறிலங்காவின் குத்துக்கரணம்’ – பிரபல இந்திய ஊடகவியலாளரின் பார்வை

சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேணிவரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்தும் சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணை தொடர்பாக அமைதி காத்து வருகிறார். இவர் இந்த விடயம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சுஸ்மாவுடன் பேசினார் மலிக் சமரவிக்கிரம

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

லசந்த படுகொலை – சந்தேக நபர்களின் படங்களை மீண்டும் வெளியிட்டது சிறிலங்கா காவல்துறை

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் படங்களை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் எட்கா உடன்பாடு – இந்திய, சிறிலங்கா அமைச்சர்கள் இணக்கம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை (எட்கா) செய்து கொள்வது தொடர்பாக, விரைவாக பேச்சுக்களை நடத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள், முடிவை எட்டுவதற்கு, இந்தியாவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் சட்டவிரோதமானது அல்ல – பரணகம

சிறிலங்கா இராணுவத்தினர் கொத்தணிக் குண்டுகளைப் போரில் பயன்படுத்தியதற்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ள, காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம, 2010ஆம் ஆண்டுக்கு முன்னர் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.